பள்ளிகள் திறப்பு; மாணவர்கள் உற்சாகம்: பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே!| Dinamalar

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு; மாணவர்கள் உற்சாகம்: பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே!

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021
Share
திருப்பூர் : இந்தக் கல்வியாண்டு துவங்கி, மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. பள்ளிகளில், நேற்று முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் துவங்கியிருக்கின்றன.தொற்று இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து, திருப்பூர் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நேற்று பள்ளி மாணவர்கள் சீருடையுடன் ரோட்டில் நடந்துவந்ததே கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 418 அரசு,
 பள்ளிகள் திறப்பு; மாணவர்கள் உற்சாகம்: பெறுவதற்கு உலகம் உண்டு  துணியும் பொழுதிலே!

திருப்பூர் : இந்தக் கல்வியாண்டு துவங்கி, மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. பள்ளிகளில், நேற்று முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் துவங்கியிருக்கின்றன.

தொற்று இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து, திருப்பூர் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நேற்று பள்ளி மாணவர்கள் சீருடையுடன் ரோட்டில் நடந்துவந்ததே கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 418 அரசு, தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் நேற்று திறக்க அறிவுறுத்தப்பட்டது. இதில், 49.4 சதவீத மாணவர்கள் வருகை புரிந்தனர். அதிகபட்சமாக, பிளஸ் 2 மாணவர்கள், 66 சதவீதம் பேர் வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிரியர்களையும், நண்பர்களையும் சந்தித்த மகிழ்ச்சியில், மாணவ, மாணவியர் உற்சாகம் பொங்க காணப்பட்டனர்.

அரசு வழிகாட்டுதலின்கீழ் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுவதை, கலெக்டர் வினீத், முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்தினர்.சானிடைசர் பயன்பாட்டில் கவனம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கு ஏற்ப, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி அடிப்படையில், சுழற்சி முறையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பெரும்பாலான குழந்தைகள் அடிக்கடி 'சானிடைசர்' பயன்படுத்த வேண்டும் என்று, மதிய உணவு சாப்பாட்டிற்கு முன் சானிடைசர் பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறு. சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே சாப்பிட வேண்டும். இதை, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்,'' என்றார்.மட்டற்ற மகிழ்ச்சிநெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காமன் கூறுகையில்,''மாணவர்கள் வீட்டில் இருந்தே சாப்பாடு, குடிநீர் எடுத்து வர வேண்டும். எந்தவொரு பொருட்களையும் பகிரக்கூடாது. தேவையற்ற பகுதிகளை தொடக்கூடாது.

தேவையான கைக்குட்டைகள் எடுத்து வர அறிவுறுத்தியுள்ளோம். பள்ளிகளில் ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டியுள்ளோம். அவசர மருத்துவ உதவிக்கு தொலைபேசி எண்களையும் அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களை பார்ப்பது, ஆசிரியர்களாகிய எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியரின் உடல் வெப்ப பரிசோதனையை கண்டறியும் ஆசிரியர்கள்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X