பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் குவியும் மக்கள் ஊழியர்களுக்கு பரிசோதனை

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டியில், சுற்றுலா ஊழியர்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், ஆக., 20 முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூழல் சுற்றுலாவும் திறக்கப்பட்டது. இதுவரை, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து சென்றுள்ளனர்.சுழற்சி முறைஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,

ஊட்டி:ஊட்டியில், சுற்றுலா ஊழியர்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், ஆக., 20 முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூழல் சுற்றுலாவும் திறக்கப்பட்டது. இதுவரை, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து சென்றுள்ளனர்.சுழற்சி முறைஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னுார் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் இருந்து பயணியர் அதிகளவில் வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், தோட்டக்கலை, சுற்றுலா கழக ஊழியர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், தனியார் காட்டேஜ்மற்றும் ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.நீலகிரி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி போட்டிருந்தாலும், அனைத்து துறை ஊழியர்களையும் சுழற்சி முறையில், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X