சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர் குத்தி கொலை

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், மாநகராட்சி துாய்மைப் பணியாளரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.சேலம், கிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் விநாயகம், 32; திருப்பூர் மாநகராட்சி தற்காலிக துாய்மைப் பணியாளர்.சூசையாபுரத்தில் தங்கிஇருந்தார். இவருக்கு, அப்பகுதியில் சிலருடன் முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், ஓடக்காடு வீதியில் விநாயகம்

திருப்பூர்:திருப்பூரில், மாநகராட்சி துாய்மைப் பணியாளரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம், கிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் விநாயகம், 32; திருப்பூர் மாநகராட்சி தற்காலிக துாய்மைப் பணியாளர்.சூசையாபுரத்தில் தங்கிஇருந்தார். இவருக்கு, அப்பகுதியில் சிலருடன் முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், ஓடக்காடு வீதியில் விநாயகம் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மூவர், வாக்குவாதம் செய்தனர். அதில், ஒருவர் கத்தியால் விநாயகத்தை குத்தினார். இதில் அவர் இறந்தார். கொலையாளிகள் தப்பியோடினர்.

திருப்பூர் வடக்கு போலீசார் கூறுகையில், 'விநாயகத்துக்கு, அப்பகுதியைச் சேர்ந்த விஷ்வா, 23, கார்த்தி, 30 ஆகியோருடன் பிரச்னை இருந்து வந்தது. இதனால், விநாயகம் அரிவாளுடன் சுற்றி வந்தார். சமீபத்தில் கார்த்தியை விநாயகம் தாக்கியுள்ளார்.'ஆத்திரமடைந்த கார்த்தி, விஷ்வா மற்றும் நண்பர் சிவா, 22 ஆகியோர் சேர்ந்து விநாயகத்தை குத்திக் கொன்றனர். சிவாவை கைது செய்து, இருவரை தேடி வருகிறோம்'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X