கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த ஐகோர்ட்டில் வழக்கு

Added : செப் 02, 2021
Share
Advertisement
மதுரை:மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையத்திடம் விபரம் பெற்றுத் தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது.மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் புதிதாக உருவாக்க பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர, பிற மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி,

மதுரை:மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையத்திடம் விபரம் பெற்றுத் தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் புதிதாக உருவாக்க பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர, பிற மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை.


உத்தரவு

நகர்ப்புற மக்களுக்கு சுகாதாரம், குடிநீர், ரோடு உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி,கே.முரளிசங்கர் அமர்வுவிசாரித்தது. மனுதாரர், 'செப்., 15க்குள் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை இல்லை' என்றார். மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுத் தரப்பில் விபரம் பெற்றுத் தெரிவிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் கோரியது. நீதிபதிகள் செப்டம்பர் 20க்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X