பொது செய்தி

தமிழ்நாடு

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு திருக்குறள் கற்று தரும் மாணவி

Added : செப் 02, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு, 'ஆன்லைன்' வழியாக திருக்குறள் கற்றுக் கொடுக்கும், தஞ்சாவூர் மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர். தஞ்சாவூர், நாலுகால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் - சாந்தி தம்பதி மகள் தேவஸ்ரீ, 14. தனியார் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். தன் வீட்டு வாசலில் பலகை அமைத்து, அதில் நாள்தோறும் திருக்குறளையும், அதற்கான பொருளையும்

தஞ்சாவூர்:ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு, 'ஆன்லைன்' வழியாக திருக்குறள் கற்றுக் கொடுக்கும், தஞ்சாவூர் மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர், நாலுகால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் - சாந்தி தம்பதி மகள் தேவஸ்ரீ, 14. தனியார் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். தன் வீட்டு வாசலில் பலகை அமைத்து, அதில் நாள்தோறும் திருக்குறளையும், அதற்கான பொருளையும் விளக்கி எழுதி வருகிறார். திருக்குறள் ஒப்பித்தலுக்காக, பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார்.

இது தொடர்பான தகவல்கள், சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கும் திருக்குறள் கற்றுக் கொடுக்க வேண்டும் என, தேவஸ்ரீயை தொடர்பு கொண்டனர். இதையடுத்து, 2020 டிசம்பர் முதல், நாள்தோறும் ஆன்லைன் மூலம், ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு திருக்குறள் வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார்.

இதில், 5 - 13 வயதுக்கு உட்பட்ட 13 பேர் படித்து வருகின்றனர். தேவஸ்ரீ கூறுகையில், ''திருக்குறளை கடல் தாண்டி உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் லட்சியம். ''ஒவ்வொரு நாளும், இரண்டு திருக்குறள் கற்றுக் கொடுக்கிறேன். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X