பொது செய்தி

தமிழ்நாடு

மகாலில் திருமணம் நடந்தால் 'தாலிக்கு தங்கம்' கிடையாது

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருமண மண்டபத்தில், கல்யாணம் முடித்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி வழங்க சமூக நலத்துறை தடை விதித்துள்ளது.தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 10ம் வகுப்பிற்கு, 25 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 அதற்கு மேல் படித்திருந்தால், 50 ஆயிரம் நிதியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2017 - 2018 ம் ஆண்டு மனுக்களில் தகுதியுள்ளோருக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவி

திருமண மண்டபத்தில், கல்யாணம் முடித்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி வழங்க சமூக நலத்துறை தடை விதித்துள்ளது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 10ம் வகுப்பிற்கு, 25 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 அதற்கு மேல் படித்திருந்தால், 50 ஆயிரம் நிதியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2017 - 2018 ம் ஆண்டு மனுக்களில் தகுதியுள்ளோருக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவி வழங்கப்பட்டது.நடப்பாண்டு 2021 வரை, 4 லட்சத்து 96 ஆயிரத்து 439 பேர் தாலிக்கு தங்கம், திருமண நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் தகுதிப்படி, 1 லட்சத்து 30 ஆயிரத்து 820 பயனாளிகளுக்கு நிதி, தாலிக்கு தங்கம் வழங்கினர். 30 ஆயிரத்து 697 மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். இந்நிலையில், 2021 மார்ச் வரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் மட்டுமே தகுதி பட்டியலில் உள்ளன.

இந்நிலையில், சமூக நலத்துறை இயக்குனர் டி.ரத்னா உத்தரவு:தாலிக்கு தங்கம், நிதி உதவி முற்றிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மட்டுமே வழங்கப்படும். குடும்பத்தில் அரசு பணி, வேறு திருமண உதவி திட்டத்தில் பயன் பெற்றிருந்தால் அம்மனு ரத்து செய்யப் படும்.திருமண வயது பெண் 18, ஆண் 21க்கு மேல் இருந்தால் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்க வேண்டும். ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு மாடிவீடு, நான்கு சக்கர வாகனம் இருந்தால் மனு தள்ளுபடி செய்யப் படும். திருமண மகாலில் திருமணம் செய்திருந்தால் தாலிக்கு தங்கம், நிதி உதவி வழங்கப் படாது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202105:44:54 IST Report Abuse
சந்திரசேகர் ஒரு சின்ன சந்தேகம். வருடம் 72ஆயிரம் ரூபாய் வருமானம் வருபவர்களுக்கு மட்டும் இந்த உதவி தொகை என்றால் மாதம் வருமானம் 6000 ரூபாய் என்ற கணக்கில் வருகிறது.இந்த காலத்தில் இந்த 6000ஆயிரம் ரூபாயை வைத்து கொண்டு 1மாதம் வாழ்க்கை நடத்த முடியுமா? இப்படி ஒரு சூழ்நிலையில் யார் யாரை ஏமாற்றுவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X