பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மோட்டார் வாகனங்களுக்கு 'பம்பர் டூ பம்பர்' இன்சூரன்ஸ்: செப்.1 முதல் அமலுக்கு வந்தது

Added : செப் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து (செப்.1) முதல் 'பம்பர் டூ பம்பர்' அடிப்படையில்ஐந்தாண்டுகளுக்கு கட்டாய காப்பீடு செய்வதற்கான உத்தரவு அமலுக்கு வந்தது.ஆக.26ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விபத்து இழப்பீடு வழக்கில் செப்.1 முதல் அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் 'பம்பர் டூ பம்பர்' என்ற அடிப்படையில் 5

ராமநாதபுரம்:அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து (செப்.1) முதல் 'பம்பர் டூ பம்பர்' அடிப்படையில்ஐந்தாண்டுகளுக்கு கட்டாய காப்பீடு செய்வதற்கான உத்தரவு அமலுக்கு வந்தது.

ஆக.26ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விபத்து இழப்பீடு வழக்கில் செப்.1 முதல் அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் 'பம்பர் டூ பம்பர்' என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து போக்குவரத்து துறை இதனை அமல்படுத்தும் அரசாணையை வெளியிட்டது. செப்.1 முதல் இது அமலுக்கு வருவதாகவும் செப்.1 முதல் வாகன ஷோரூம்களில் எந்த வாகனம் வாங்கினாலும் அதன் மதிப்பிற்கேற்ப ஐந்தாண்டுகளுக்கான இன்சூரன்ஸ் தொகை கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த காப்பீடு மூலம் வாகன உரிமையாளர் டிரைவர் பயணி உடன் பயணிப்பவர் உள்ளிட்ட அனைவரையும் அத்துடன் இந்த வாகனத்தால் பிறர் பாதிக்கப்பட்டால் அவருக்கும் வாகன சேதத்திற்கும் இழப்பீடு வழங்க இந்த பம்பர் டூ பம்பர் காப்பீடு திட்டத்தில் வழி செய்யப்பட்டு உள்ளது.மேலும் தாமதமின்றி இழப்பீடு பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி வாகன விபத்து இழப்பீடு பெற காலம் கடத்தப்படும் நிலை மாறும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X