இந்தியா

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சரித்திரம் படைத்த இந்தியா

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நியூயார்க்: கடந்த ஒரு மாதமாக, இந்தியா தலைமையிலான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, அமெரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.கடந்த ஆகஸ்டில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் இந்தியா தலைமை ஏற்றது. இது குறித்து, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது:இந்தியா தலைமையிலான,
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சரித்திரம் படைத்த இந்தியா

நியூயார்க்: கடந்த ஒரு மாதமாக, இந்தியா தலைமையிலான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, அமெரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்டில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் இந்தியா தலைமை ஏற்றது. இது குறித்து, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது:
இந்தியா தலைமையிலான, ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள், இதுவரை இல்லாத வகையில் பல முன்மாதிரிகளை கொண்டதாக அமைந்திருந்தன. பிரதமர் மோடி தலைமையில், கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்திய பிரதமர் ஒருவர், ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை ஏற்றது இதுவே முதன் முறையாகும்.


latest tamil news



அது மட்டுமின்றி, ஆசிய - பிசிபிக் கடல் பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழலில், கடல்சார் பாதுகாப்பு குறித்து ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் முதன் முறையாக விவாதித்ததும் கூடுதல் சிறப்பாகும்.

வெளியுறவு துறை அமைச்சர், ஜெய்சங்கர், அமைதிப் படை குறித்தும், பயங்கரவாத தடுப்பு பற்றியும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இரு கூட்டங்களில் உரையாற்றினார். இதில் முதன் முறையாக, அமைதிப் படைக்கான தொழில்நுட்ப உதவி பற்றி விவாதித்து, தலைமைப் பொறுப்பில் இருந்த இந்தியா அறிக்கை வெளியிட்டது.
அமைதிப் படையினர் செய்யும் குற்றங்களுக்கு, அவர்களை பொறுப்பாக்கும் முக்கிய வரைவு தீர்மானத்தை, இந்தியா தாக்கல் செய்தது. இதுவும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இதுவரை நடந்திராத வகையில், 80 உறுப்பு நாடுகள் வழிமொழிந்த இந்த தீர்மானத்திற்கு, கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தது பெருமைக்குரிய விஷயமாகும்.

காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 'தலிபான் அரசு, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரக்கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆப்கன் தொடர்பாக, ஒரே மாதத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும், இதுவரை நடைபெறாதது. இந்த வகையில், இந்தியா சிறப்பாக செயல்பட்டதற்கு, அமெரிக்கா, அயர்லாந்து, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. அந்நாடுகளுக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று முதல், ஐரோப்பிய நாடான, அயர்லாந்து, ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை ஏற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.M.Muthu - Guangzhou,சீனா
02-செப்-202108:19:13 IST Report Abuse
R.M.Muthu ஜெய் ஹிந்தி - நமது பெருமை, விரைவில் ஐநா வில் நிரந்தர உறுப்பினராக வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
02-செப்-202104:30:57 IST Report Abuse
M  Ramachandran அப்போ இலங்கையில் இந்திய அமைதி படையால் இலங்கை தமிழர்களுக்கு யேர்பாட்ட உயிர் இளப்புக்களுக்கும் அவமானங்களுக்கு போரால் எற்பட்ட நஷ்டத்திற்கும் பொறுப்பாகுமா?
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
02-செப்-202113:25:25 IST Report Abuse
KavikumarRamஅதை நீங்கள் சோனியா, ராகுல், சுடாலின், கனிமொழி, டி ஆர் பாலு, திருமா இவங்க கிட்ட கேளுங்க அவங்க தான் இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாட்டுல உண்ணாவிரதம் இருந்துகிட்டு இலங்கைல விருந்து சாப்பிட்ட மானத்தமிழர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X