பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலம் அபகரிக்க முயற்சி

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் வடக்கு தாலுகா, நெருப்பெரிச்சல் கிராமம், வாவிபாளையத்தில், செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 8.46 ஏக்கர் நிலம் உள்ளது. திருமுருகன்பூண்டி கோவில் அதிகாரிகள், நிலத்தை பராமரித்து வருகின்றனர். நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முயற்சி நடந்தது.பத்திரம் மூலம், பட்டா பெயர் மாற்றம்

திருப்பூர் : திருப்பூர் வடக்கு தாலுகா, நெருப்பெரிச்சல் கிராமம், வாவிபாளையத்தில், செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 8.46 ஏக்கர் நிலம் உள்ளது. திருமுருகன்பூண்டி கோவில் அதிகாரிகள், நிலத்தை பராமரித்து வருகின்றனர்.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முயற்சி நடந்தது.பத்திரம் மூலம், பட்டா பெயர் மாற்றம் செய்திருந்தனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முயற்சியால், ஹிந்து அறநிலையத்துறை, கோவில் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து, நிலத்தை மீட்டு வைத்துள்ளது.நேற்று ஒரு தரப்பினர், திடீரென கோவில் நிலத்தை சுத்தம் செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பக்தர்கள், கோவில் நிலத்தில் இருந்து வெளியேறுமாறு எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவால், நிலம் சுத்தப்படுத்தும் பணி கைவிடப்பட்டது.

அறநிலையத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ''கோவில் நிலம் ஆக்கிரிப்பு செய்வதாக தகவல் கிடைத்தது; திருமுருகன்பூண்டி கோவில் அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பிரச்னை குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X