பொது செய்தி

தமிழ்நாடு

'சிலிண்டருக்கு கூடுதல் வசூல்!'

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் வரவேற்றார். பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிகுமார்:காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் போது, ரசீதில் உள்ளதை காட்டிலும், 50 முதல் 100 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுகிறது. நுகர்வோர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் வரவேற்றார். பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிகுமார்:காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் போது, ரசீதில் உள்ளதை காட்டிலும், 50 முதல் 100 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுகிறது.

நுகர்வோர் சுரண்டப்படுகின்றனர். இதை தடுக்க வேண்டும். நல்லுார் நுகர்வோர் நலமன்ற தலைவர் சண்முகசுந்தரம்: கமர்சியல் சிலிண்டர் என்ற பெயரில், வெளியூரில் இருந்து, வீட்டு உபயோக சிலிண்டர்களும், திருப்பூருக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. விலை குறைத்து விற்பதாக கூறி 19 கிலோ இருக்க வேண்டிய கமர்சியல் சிலிண்டரை, 17 கிலோ எடையுடன் விற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

திருமுருகன்பூண்டி, நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாட்ஷா: டிச., 24ல், தேசிய நுகர்வோர் தினம், மார்ச், 15ல், உலக நுகர்வோர் தினத்தன்று, சமையல் காஸ் சிலிண்டர் நிறுவனங்களுடனான, வாடிக்கையாளர் தொடர்பை மேம்படுத்த, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.முன்னதாக, 'உஜ்வாலா 2.0' திட்டத்தில், பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குவது குறித்தும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. காஸ் ஏஜன்சி நிர்வாகிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X