பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி சிறையில் கைதி மரணம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி சிறையில் இருந்த கைதி உடல்நலக்குறைவால் இறந்தார்.தென்காசி, சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கட்டிசாமி, 40. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள லாட்ஜில் தங்கி, வேலை செய்து வந்தார். ஒரு வழக்கில் மேட்டுப் பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, நேற்று காலை, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிளைச்சிறையில்

அவிநாசி : அவிநாசி சிறையில் இருந்த கைதி உடல்நலக்குறைவால் இறந்தார்.தென்காசி, சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கட்டிசாமி, 40. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள லாட்ஜில் தங்கி, வேலை செய்து வந்தார். ஒரு வழக்கில் மேட்டுப் பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, நேற்று காலை, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.+

அப்போது திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் சிறைக்கு கொண்டு வரப்பட்டார். நேற்று மாலை, 5:00 மணிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X