பொது செய்தி

தமிழ்நாடு

சாலமன் தீவு தொழில் ஆலோசகர் நியமனம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : ஆஸ்திரேலியா சாலமன் தீவில், தென்னை நாரில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து, ஆலோசனை வழங்க, பொள்ளாச்சியை சேர்ந்த கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார்.பொள்ளாச்சி தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவரும், கயிறு வாரிய உறுப்பினருமான கவுதமன் கூறியதாவது:ஆஸ்திரேலியா சாலமன் தீவு, தேங்காய் உற்பத்தியில், 10வது இடம் வகிக்கிறது.

பொள்ளாச்சி : ஆஸ்திரேலியா சாலமன் தீவில், தென்னை நாரில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து, ஆலோசனை வழங்க, பொள்ளாச்சியை சேர்ந்த கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவரும், கயிறு வாரிய உறுப்பினருமான கவுதமன் கூறியதாவது:ஆஸ்திரேலியா சாலமன் தீவு, தேங்காய் உற்பத்தியில், 10வது இடம் வகிக்கிறது. அங்கு, தேங்காயை கொண்டு சில மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கின்றனர்.

யுனைடெட் நேஷன் டெவலப்மென்ட் புரோகிராம் (யு.என்.டி.பி.,) அமைப்பு, ஆஸ்திரேலியா சாலமன் தீவு தொழில்துறை சார்பில், தேங்காய் மற்றும் தென்னை நாரில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டது.இதற்காக, அந்த அமைப்பு மற்றும் அரசின் தொழில்துறை சார்பில், ஆலோசகராக என்னை நியமித்துள்ளனர். மொத்தம், நான்கு மாத திட்டம் உள்ளது. ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X