பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி கூலி பேச்சுவார்த்தை ஜவுளி உற்பத்தியாளர் 'ஆப்சென்ட்'

Added : செப் 02, 2021
Share
Advertisement
பல்லடம் : ஏழு ஆண்டுகளாக ஒப்பந்தக் கூலி உயர்த்தப்படாததால், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆக., மாதம் நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை.நேற்று, திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்துக்கு, விசைத்தறி உரிமையாளர்கள்

பல்லடம் : ஏழு ஆண்டுகளாக ஒப்பந்தக் கூலி உயர்த்தப்படாததால், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஆக., மாதம் நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை.நேற்று, திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்துக்கு, விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்ற நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருவரும் பங்கேற்கவில்லை.தேதி குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ''விசைத்தறி தொழில் நலிவடைந்த நிலையிலும், கடந்த, 2014 முதல் கூலி உயர்வு குறித்த பேச்சு வார்த்தைக்கு தீர்வு எட்டப்படவில்லை. வங்கிக்கடன் பெற்றுள்ளதால், வேறு வழியின்றி நஷ்டத்துக்கு தொழிலை செய்து வருகிறோம். ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை வழங்க மறுப்பதுடன், பேச்சுவார்த்தையையும் புறக்கணிக்கின்றனர். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, கூலி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர், மற்றும் கலெக்டர் களை சந்திக்க தீர்மானித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X