சைபர் க்ரைம் தகவல் சேகரிப்பு போலீஸ் விசாரணை தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சைபர் க்ரைம்' தகவல் சேகரிப்பு போலீஸ் விசாரணை தீவிரம்

Added : செப் 02, 2021
Share
கோவை : கடத்தல் வழக்கில் கைதான கோவை போலீஸ்காரர், 'சைபர் க்ரைம்' போலீசார் மூலம் தகவல் சேகரித்த விவகாரத்தில், எந்தெந்த குற்ற எண்களை வைத்து தகவல் பெறப்பட்டது என, விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சிவகங்கையை சேர்ந்த கார் டிரைவர் மகேஸ்வரன், 33, தங்கம் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த கோவைமாநகர குற்றப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஸ்வரன், 27 கைது

கோவை : கடத்தல் வழக்கில் கைதான கோவை போலீஸ்காரர், 'சைபர் க்ரைம்' போலீசார் மூலம் தகவல் சேகரித்த விவகாரத்தில், எந்தெந்த குற்ற எண்களை வைத்து தகவல் பெறப்பட்டது என, விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிவகங்கையை சேர்ந்த கார் டிரைவர் மகேஸ்வரன், 33, தங்கம் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த கோவைமாநகர குற்றப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஸ்வரன், 27 கைது செய்யப்பட்டார். இவர், சில 'சைபர் க்ரைம்' போலீசார் உதவியுடன் கார் டிரைவர் மகேஸ்வரனின் மொபைல்போன் அழைப்பு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனிப்படை போலீசார் கூறுகையில், 'கோவையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் 'சைபர் க்ரைம்' போலீஸ் பிரிவு செயல்படுகிறது. இங்கிருந்து கடந்த சில மாதங்களில் விண்ணப்பிக்கப்பட்டு பெறப்பட்ட மொபைல்போன் விபரங்கள், அதற்கு பயன்படுத்திய குற்ற எண் போன்ற விஷயங்களை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.போலி குற்ற எண் அல்லது வேறு ஏதாவது வழிகளில் தகவல் திரட்டப்பட்டதா என்பதை கண்டுபிடித்துவிடலாம். தகவல் திரட்ட உறுதுணையாக இருந்தவர்கள் யார் என்ற விபரங்களும் தெரிந்துவிடும். அவர்களுக்கும், தற்போது கைதாகியுள்ள போலீஸ்காரர் ராஜேஸ்வரனுக்கு உள்ள தொடர்பும் தெரியவரும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X