பொது செய்தி

தமிழ்நாடு

'மது போதை' இளைஞர் கொலை

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : மது பழக்கத்தால் 'டார்ச்சர்' செய்து வந்த பேரனை சொந்த தாத்தா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து திட்டம் தீட்டி கொலை செய்தனர்.கோவை, சிவானந்தாகாலனி, அண்ணா புது வீதியை சேர்ந்தவர் முருகன், 67; தொழிலாளி. இவரது பேரன் விஜயராகவன், 27. படித்து முடித்து விட்டு, வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்த இளைஞர், மது பழக்கத்துக்கு அடிமையானார்.இரு நாட்களுக்கு முன் விஜயராகவன்

கோவை : மது பழக்கத்தால் 'டார்ச்சர்' செய்து வந்த பேரனை சொந்த தாத்தா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து திட்டம் தீட்டி கொலை செய்தனர்.

கோவை, சிவானந்தாகாலனி, அண்ணா புது வீதியை சேர்ந்தவர் முருகன், 67; தொழிலாளி. இவரது பேரன் விஜயராகவன், 27. படித்து முடித்து விட்டு, வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்த இளைஞர், மது பழக்கத்துக்கு அடிமையானார்.இரு நாட்களுக்கு முன் விஜயராகவன் அவரது அறையில் மயங்கி கிடந்தார்.

அவரை தாத்தா முருகன் மற்றும் அவரது நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், கழுத்தில் காயங்கள் தென்பட்டதால் சந்தேகமடைந்த டாக்டர்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார், தாத்தா முருகனிடம் விசாரித்தபோது முன்னுக்கு, பின் முரணாக தகவல்களை தெரிவித்து வந்தார். பிரேத பரிசோதனையில், கழுத்தை நெரித்து இளைஞர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. முதியவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை வெளியானது.ரத்தினபுரி போலீசார் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட விஜயராகவனின் தாய், தந்தை திண்டுக்கல்லில் உள்ளனர். இவர் சிறு வயதில் இருந்தே கோவையில் தாத்தா வீட்டில் வளர்ந்து வந்தார். தினமும் மது அருந்தி வந்து தாத்தா மற்றும் பாட்டியை அடித்து, கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 'டார்ச்சர்' அதிகரித்ததால், பேரனை கொலை செய்ய தாத்தா திட்டமிட்டார்.இதற்காக, திருப்பதி, 26, நாகராஜ், 35 ஆகியோரிடம், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றவர்கள் மூன்று நாட்களுக்கு முன் மது வாங்கி வீட்டுக்கு வந்துள்ளனர். பின், தாத்தா, பேரன் உள்பட நான்கு பேரும் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் விஜயராகவன் அங்கேயே படுத்துவிட, மூன்று பேரும் சேர்ந்து, ஒயரால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின், சடலத்தை அறையில் படுக்க வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் நாடகமாடினர். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X