பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றில் மீள்வோர் அதிகரிப்பு!

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆக., 1 முதல், 10ம் தேதி வரை, முதல் பத்து நாளில் புதிதாக, 861 பேருக்கு தொற்று உறுதியானது.அடுத்த பத்து நாளில் (11 - 20ம் தேதி) பாதிப்பு, 850 ஆக குறைந்தது. 21-31ம் தேதி, கடைசி பத்து நாளில் பாதிப்பு, 764 ஆக சரிந்தது.அதிகபட்சமாக ஆக., 13ம் தேதி ஒரு நாள் மட்டும் தொற்று, 105 பேருக்கு கண்டறியப்பட்டது. மற்ற நாட்களில், 70 முதல், 85 என்ற நிலையிலேயே தொடர்ந்தது. கடந்த பத்து

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆக., 1 முதல், 10ம் தேதி வரை, முதல் பத்து நாளில் புதிதாக, 861 பேருக்கு தொற்று உறுதியானது.

அடுத்த பத்து நாளில் (11 - 20ம் தேதி) பாதிப்பு, 850 ஆக குறைந்தது. 21-31ம் தேதி, கடைசி பத்து நாளில் பாதிப்பு, 764 ஆக சரிந்தது.அதிகபட்சமாக ஆக., 13ம் தேதி ஒரு நாள் மட்டும் தொற்று, 105 பேருக்கு கண்டறியப்பட்டது. மற்ற நாட்களில், 70 முதல், 85 என்ற நிலையிலேயே தொடர்ந்தது. கடந்த பத்து நாட்களாக ஒரு நாள் பாதிப்பு, 75ஐ தாண்டவில்லை.ஆக., மாதத்தில் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 2,641 பேர், தொற்றில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்; 2,475 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 'டிஸ்சார்ஜ்' ஆகியவர்கள் எண்ணிக்கை அதிகம்.ஆக., துவக்கத்தில், 87,895 ஆக இருந்த மாவட்டத்தின் தொற்று பாதிப்பு, மெல்ல அதிகரித்து தற்போது, 90 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, 90,305 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாத துவக்கத்தில், 86 ஆயிரமாக இருந்த நலம் பெற்றோர் எண்ணிக்கை, 31ல், 88 ஆயிரத்து, 607 ஆக உயர்ந்துள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' தொடர் சிகிச்சை வழங்கினாலும் இணைநோய் உள்ளவர், 70 வயது கடந்தவர்களை தொற்றில் இருந்து மீட்க கடும் சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. 60 சதவீதம் பேர் நோயுடன் எதிர்த்து போராடி, வந்து விடுகின்றனர்.மீதமுள்ளவர்களை காப்பாற்ற முடிவதில்லை. எனவே வயதானவர், இணை நோய் உள்ளவர் இக்காலகட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X