பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.கணேசன், கடையம், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில் இருந்து எந்த நிமிடம் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பது தெரிந்தும், இங்கு ஆட்சி செய்த ஆங்கிலேயர் கட்டிய கட்டடங்கள் இன்றும் உறுதியாக உள்ளன. பல கட்டடங்கள், இன்றும் செயல்பாட்டில் உள்ளன. நுாறு
சாலை, பாலங்கள், கட்டடங்கள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.கணேசன், கடையம், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில் இருந்து எந்த நிமிடம் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பது தெரிந்தும், இங்கு ஆட்சி செய்த ஆங்கிலேயர் கட்டிய கட்டடங்கள் இன்றும் உறுதியாக உள்ளன. பல கட்டடங்கள், இன்றும் செயல்பாட்டில் உள்ளன. நுாறு ஆண்டுகளை நெருங்கிய நிலையிலும், அந்த கட்டடத்தில் இருந்து ஒரு செங்கலை பெயர்த்தெடுக்க கூட தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது.

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகளும், பாலங்களும் கூட இன்றளவும் உறுதியாக உள்ளன. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்த பின் தான், சிறு துாறலுக்கே சாலை பெயர்ந்து விடுகிறது; பாலங்கள் பல்லிளிக்கின்றன; கையால் தட்டினாலே கட்டடங்கள் இடிகின்றன.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னை மவுலிவாக்கத்தில் இரண்டு பிளாக்குகளாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் நொறுங்கி விழுந்து, 61 பேர் இறந்தனரே, அதை மறக்க முடியுமா? சென்னை ராமாபுரம் பகுதிகளில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பின் நிலை மிக மோசமாக உள்ளது. கையால் தட்டினாலே சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுகின்றது.


latest tamil newsஇதுவே இப்படி என்றால், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை பற்றி விவரிக்க தேவையில்லை.இந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தரமற்ற முறையில் கட்டப்பட்ட கட்டடம் நொறுங்கி விழுந்தால், எத்தனை உயிர்கள் பறி போகும்?

புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் நேரிடும் உயிராபத்து தவிர்க்க இயலாதது. ஆனால் இப்படி தரமற்ற கட்டுமானங்களால் நேரிடும் உயிர் பலி என்பது ஆட்சியாளர்களின், 'கமிஷன், கலெக் ஷன், கரெப்ஷன்' போன்ற பேராசைகளால் நிகழ்பவை.இந்த அரசியல்வாதிகளையும், ஒப்பந்ததாரர்களையும் கேட்க விழையும் கேள்வி ஒன்றே ஒன்று தான்...

தரமற்ற கட்டடத்தில் நீங்கள் குடும்பத்துடன் வசிக்க துணிவீரா? இல்லை தானே... தரமற்ற முறையில் கட்டடத்தை கட்டி, எண்ணற்ற உயிர்களை பலி வாங்க துடிக்கின்றீரே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி கிடையாதா?நம்மை 200 ஆண்டு காலம் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயனுக்கு இருந்த மனசாட்சியில் 1 சதவீதம் கூட, உங்களுக்கு இல்லையே!

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
02-செப்-202121:31:58 IST Report Abuse
GANESUN ஆண்டவன் பேர சொல்லிகிட்டே பொதுமக்கள் நடுவுல வெடிகுண்டு வெடிக்கவைச்சு மனசாட்சியே இல்லாம கொல்றாங்களே.. கிராமிய பாடகர் கூட விட்டு வைக்கலையே..அது பத்தி பேச முடியாம நவதுவாரத்தையும் மூடிவைச்சிட்டு சொங்கிங்க சங்கிபத்தி மட்டும் பேசுறாங்க.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
02-செப்-202121:24:38 IST Report Abuse
மதுரை விருமாண்டி அட ராகவா. வாயாலே வட சுடுற வடநாட்டு வல்லுவர் ஆடீம்கா அடிமைங்க கையை தூக்கி காட்டி வோட்டுப் போடுங்கன்னு சொன்னப்போ கலர்லே செய்தி போட்டவங்க பாஜாக்கா கிளுகிளு காணொலி பத்தி வந்த ஈமெயில், கொசு மெயில் பத்தி போடமாட்டேங்கிறீகளே 🐒🐒
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-செப்-202120:41:41 IST Report Abuse
RajanRajan மனசாட்சின்னு ஒன்னு இருந்திருத்தா இவனுங்க எப்பவோ செத்திருப்பானுங்களே. இன்னும் எதற்கு நமக்கு நாமே விடியல் தேடுறானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X