பொது செய்தி

தமிழ்நாடு

அவசர கதியில் 'முளைக்கும்' குடிசைகள்.

Added : செப் 02, 2021
Share
Advertisement
அவிநாசி : வருவாய்த்துறையினர் சார்பில், வீடில்லாத ஏழைகளுக்கு, அரசு புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 15, 20 ஆண்டுகளுக்கு முன், பட்டா பெற்ற பலர், அந்த இடத்தில் வீடுகளை கட்டாமல் வைத்துள்ளனர்.இச்சூழலில், தினமும், நுாற்றுக்கணக்கானோர் வீட்டுமனை கேட்டு, முதல்வருக்கு மனு அனுப்பியபடி உள்ளனர். எனவே, பயன்படுத்தப்படாமல் உள்ள, அரசு வழங்கிய பட்டா
 அவசர கதியில் 'முளைக்கும்' குடிசைகள்.

அவிநாசி : வருவாய்த்துறையினர் சார்பில், வீடில்லாத ஏழைகளுக்கு, அரசு புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த, 15, 20 ஆண்டுகளுக்கு முன், பட்டா பெற்ற பலர், அந்த இடத்தில் வீடுகளை கட்டாமல் வைத்துள்ளனர்.இச்சூழலில், தினமும், நுாற்றுக்கணக்கானோர் வீட்டுமனை கேட்டு, முதல்வருக்கு மனு அனுப்பியபடி உள்ளனர். எனவே, பயன்படுத்தப்படாமல் உள்ள, அரசு வழங்கிய பட்டா நிலங்களை 'சர்வே' செய்து. அறிக்கை சமர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது; அதற்கான பணியில், வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 'தங்கள் நிலம் பறிபோய்விடுமோ' என்ற அச்சத்தில், மடத்துப்பாளையம், கரையபாளையம் உட்பட பல இடங்களில், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த, மனையிடங்களில், அவசர கதியில், குடிசை அமைக்கும் பணியில், மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விதிமுறையின்படி, வீட்டுமனைப்பட்டா பெற்ற ஆறு மாதங்களில், அந்த இடத்தில் வீடு கட்டி, பயனாளிகள் குடியேற வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும். 'சர்வே பணியில், பட்டா நிலம் பயன்பாடு சார்ந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X