பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் சாசனம் தேவை ம.தி.மு.க., கோரிக்கை

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சியில் மக்கள் சாசனம் அமல்படுத்த, ம.தி.மு.க., மாநில தீர்மான குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழக முதல்வருக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:தமிழக முதல்வர் கோவைக்கு, புதிய கமிஷனரை நியமித்தார். ஒரு சில அதிகாரிகளை தவிர, பிறர் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். வெளியில் இருந்து வந்த, மாநகராட்சி உயர்

கோவை : கோவை மாநகராட்சியில் மக்கள் சாசனம் அமல்படுத்த, ம.தி.மு.க., மாநில தீர்மான குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:தமிழக முதல்வர் கோவைக்கு, புதிய கமிஷனரை நியமித்தார். ஒரு சில அதிகாரிகளை தவிர, பிறர் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். வெளியில் இருந்து வந்த, மாநகராட்சி உயர் அலுவலர் ஒருவர், நிறைய பணம் கொடுத்து இங்கு வந்துள்ளேன் எனக்கூறி, வசூலில் ஈடுபடுகிறார். தாங்கள் அவரது நடவடிக்கைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை மாநகராட்சியில், 1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, மக்கள் சாசனத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மக்கள் சாசனம் அமல்படுத்தப்பட்டால், மக்களுக்கு அதிக பலன் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X