பொது செய்தி

தமிழ்நாடு

ஆடைகளை விரைவாக அனுப்புங்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு யோசனை 'அமெரிக்க துறைமுகங்களில் நெரிசல்'

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:அமெரிக்காவின் இறக்குமதியில், மூன்றில் ஒருபங்கு, கலிபோர்னியா மகாணத்தில் உள்ள, லாஸ் ஏஞ்சல்ஸ், லாங் பீச் துறைமுகங்கள் வாயிலாக நடக்கிறது.கொரோனாவால், தொழிலாளர் பற்றாக்குறை, சரக்கு வாகன இயக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.கலிபோர்னியா துறைமுக

திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:அமெரிக்காவின் இறக்குமதியில், மூன்றில் ஒருபங்கு, கலிபோர்னியா மகாணத்தில் உள்ள, லாஸ் ஏஞ்சல்ஸ், லாங் பீச் துறைமுகங்கள் வாயிலாக நடக்கிறது.கொரோனாவால், தொழிலாளர் பற்றாக்குறை, சரக்கு வாகன இயக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

. கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.கலிபோர்னியா துறைமுக பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 44 கப்பல்கள், சரக்குடன், துறைமுகத்தை அடைவதற்காக, கடலில் காத்து கொண்டிருக்கின்றன.அதேபோல், சீனாவின் பிரசித்திபெற்ற நிங்போ துறைமுகம் முழுமையாக இயங்கவில்லை. ஆண்டுதோறும் ஜூலை, ஆக., செப்., ஆகியன 'பிஸி'யான மாதங்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில், கிறிஸ்துமஸ் கால ஆயத்த ஆடை உட்பட பல்வேறுவகை பொருட்கள் அதிகளவில் இறக்குமதியாகின்றன.

கலிபோர்னிய துறைமுக பகுதியில் ஏற்பட்டுள்ள நெரிசலால், சர்வதேச அளவில், கன்டெய்னர் தட்டுப்பாடு, சரக்கு கப்பல் போக்குவரத்தில் மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், குறித்த காலத்துக்குள் ஆயத்த ஆடைகளை தயாரித்து, அனுப்பிவிட வேண்டும்.உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டால், அதிக தொகை செலவழித்து, விமானத்தில் அனுப்ப வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இது, ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு, பெரும் லாப இழப்பை ஏற்படுத்தும்.பெரிய கப்பல்கள் (மதர் வெசல்), நேரடியாக வந்து செல்லும் வகையில், துாத்துக்குடி துறைமுக பகுதியை மேம்படுத்த வேண்டும். மத்திய அரசு, கன்டெய்னர் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X