பொது செய்தி

தமிழ்நாடு

நுால் விலை உயர்வு இல்லை

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர் : இம்மாதம் நுால் விலை உயர்வு இல்லை என, தமிழக நுாற்பாலைகள் அறிவித்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா முதல் ஊரடங்கிற்கு பின், கடந்த பருத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்தது. இதையடுத்து, நுாற்பாலைகளும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு ஏப்., மாதம் வரை, நுால் விலையை தொடர்ந்து உயர்த்தின.சீரற்ற நுால் விலையால்,

திருப்பூர் : இம்மாதம் நுால் விலை உயர்வு இல்லை என, தமிழக நுாற்பாலைகள் அறிவித்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா முதல் ஊரடங்கிற்கு பின், கடந்த பருத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்தது.

இதையடுத்து, நுாற்பாலைகளும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு ஏப்., மாதம் வரை, நுால் விலையை தொடர்ந்து உயர்த்தின.சீரற்ற நுால் விலையால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், புதிய ஆர்டர்களை பெறமுடியாமலும், ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிக்க முடியாமல் தவித்தன. நுால் விலைக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டது.செப்., மாதம் நுால் விலை மேலும் உயரும் என, தகவல் பரவியதால், ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், நுால் விலை உயர்வு இல்லை; பழைய விலையே தொடரும் என, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன.விலை விவரம்20ம் நம்பர் கோம்டு ரக நுால் (வரி நீங்கலாக) 254 ரூபாய்; 24ம் நம்பர், 264 ரூபாய்; 30ம் நம்பர் நுால், 274 ரூபாய்; 34ம் நம்பர், 294 ரூபாய்; 40ம் நம்பர், 314 ரூபாய். 20ம் நம்பர் செமிகோண்டு ரக நுால், 244 ரூபாய்; 24ம் நம்பர், 254; 30ம் நம்பர், 264; 34ம் ம்பர், 284; 40ம் நம்பர், 304 ரூபாய்.

இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு உறுப்பினர் சரவணன் கூறுகையில், ''தற்போது பஞ்சு விலை குறையத்துவங்கியுள்ளது. ஒருகேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 55 ஆயிரம் ரூபாயாக உள்ளது; இந்த விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நுாற்பாலைகளும், கடந்த ஏப்., மாதத்துக்கு பின், நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை உயர்த்தவில்லை,'' என்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:

தமிழக நுாற்பாலைகள், சில மாதங்களாக, நுால் விலையை உயர்த்தாமல், சீராக தொடர்வது, வரவேற்கத்தக்கது. நுால் விலை சீராக தொடர்ந்தால், மேலும் அதிகளவு ஆர்டர்களை கவர்ந்திழுக்க முடியும். கடந்த ஆண்டு, நுால் விலையை அபரிமிதமாக உயர்த்தின.கடந்த, 2020ம் ஆண்டின் ஆக., மாதத்தை ஒப்பிடும்போது, தற்போது 35 சதவீதத்துக்கும் மேல் நுால் விலை உயர்வாக உள்ளது. இனி, படிப்படியாக நுால் விலையை குறைத்தால், ஆடை உற்பத்தி துறையினருக்கும், நுாற்பாலை துறையினருக்கும் வெற்றி வாய்ப்பு கைகூடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X