பொது செய்தி

தமிழ்நாடு

'போஷன் அபியான்' திட்டத்தில் ஊட்டச்சத்து விளக்க கண்காட்சி

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு, கோவையில் விளக்க கண்காட்சி நடந்தது.'போஷன் அபியான்' திட்டப்படி, செப்டம்பர் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, 'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதன் முதல் வாரமான செப்.,1 முதல் 7 வரை, கோவை
 'போஷன் அபியான்' திட்டத்தில் ஊட்டச்சத்து விளக்க கண்காட்சி

கோவை : ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு, கோவையில் விளக்க கண்காட்சி நடந்தது.'போஷன் அபியான்' திட்டப்படி, செப்டம்பர் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, 'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதன் முதல் வாரமான செப்.,1 முதல் 7 வரை, கோவை மாவட்ட அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இரண்டாம் வாரம் கர்ப்பிணிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவருக்கும் தினமும், 5 நிமிடம் யோகா செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நடத்தப்பட உள்ளது.மூன்றாம் வாரம், சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு தயாரிப்பவர்களுக்கு, போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

நான்காம் வாரம், எடை மற்றும் உயரம் குறைவாக உள்ள குழந்தைகளை கண்டறிந்து, ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.இதன்படி, முதல் வார நிகழ்வாக ஊட்டச்சத்து விளக்க கண்காட்சி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தரும் உணவு, காய்கறி, பாதுகாப்பு தரும் உணவுப் பொருட்கள், கூடுதல் சக்தி தரும் உணவுப்பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியை, கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பிரசார விழிப்புணர்வு வாகன பயணத்தையும், தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் மீனாட்சி மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X