பொது செய்தி

தமிழ்நாடு

மாரியப்பனுக்கு  வெள்ளி பதக்கம் வாழ்த்துகிறது பாரா ஒலிம்பிக் சங்கம் 

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு, தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் போட்டியில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, 1.86 மீட்டர் உயரம் தாண்டி, வெள்ளி பதக்கம்

கோவை : டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு, தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் போட்டியில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, 1.86 மீட்டர் உயரம் தாண்டி, வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர், இரண்டாவது முறையாக, பதக்கம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இரு முறை பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர் கூறுகையில், ''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திறமையான வீரர்கள் கண்டறியப்பட்டு கடுமையான பயிற்சி வழங்கப்பட்டது. இதனால், மாரியப்பன் தங்கவேலுக்கு வெற்றி கிடைத்துள்ளது. பாரா ஒலிம்பிக் சங்கம், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தர, தயாராக இருக்கிறது. வருங்காலத்தில் மாற்றுத்திறன் வீரர்கள், அதிக போட்டிகளில் பங்கேற்கும் வகையில், பயிற்சி வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X