பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞருடன் தகராறு இருவருக்கு 4 ஆண்டு சிறை

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்பூர் : தாராபுரம் டெக்னோ நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 38; இவரது மனைவி மேகலா மைதிலி. இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவகாரத்து வாங்குவதற்காக, மேகலா மைதிலி, தாராபுரத்தை சேர்ந்த வக்கீல் ரமணி, 65 என்பவரை சந்தித்துள்ளார்.விவாகரத்து தொடர்பாக, வழக்கறிஞர் ரமணி, செந்தில்குமாரிடம் பேசியுள்ளார். ஆத்திரமடைந்த செந்தில்குமார், குள்ளகாளிபாளையத்தை சேர்ந்த நண்பர்

திருப்பூர் : தாராபுரம் டெக்னோ நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 38; இவரது மனைவி மேகலா மைதிலி. இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவகாரத்து வாங்குவதற்காக, மேகலா மைதிலி, தாராபுரத்தை சேர்ந்த வக்கீல் ரமணி, 65 என்பவரை சந்தித்துள்ளார்.

விவாகரத்து தொடர்பாக, வழக்கறிஞர் ரமணி, செந்தில்குமாரிடம் பேசியுள்ளார். ஆத்திரமடைந்த செந்தில்குமார், குள்ளகாளிபாளையத்தை சேர்ந்த நண்பர் செந்தில்குமார், 44 என்பவருடன் சேர்ந்து, 2018 அக்., 17 அன்று, ரமணியின் கார் கண்ணாடியை உடைத்து, தகராறு செய்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் நடராஜன், நேற்று தீர்ப்பு வழங்கினார்; செந்தில்குமார் மற்றும் அவரது நண்பருக்கு தலா நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X