மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க இதோ ஆலோசனை மையம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க இதோ ஆலோசனை மையம்

Added : செப் 02, 2021
Share
கோவை : மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு, சுய தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனை மையம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.'வியூ யுவர் வாய்ஸ்' தொண்டு நிறுவனத்தினர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கடந்த வாரம் இதற்கான சிறப்பு முகாம் நடத்தினர்.இதில் பங்கேற்ற, 29 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டது. இம்முயற்சி

கோவை : மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு, சுய தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசனை மையம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

'வியூ யுவர் வாய்ஸ்' தொண்டு நிறுவனத்தினர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கடந்த வாரம் இதற்கான சிறப்பு முகாம் நடத்தினர்.இதில் பங்கேற்ற, 29 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டது. இம்முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் நிரந்தர மையம், கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தில் வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சுய தொழில் செய்யவும், திறன் மேம்படுத்தவும் ஆலோசனைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

மையத்தை துவக்கி வைத்து கலெக்டர் சமீரன் கூறுகையில், ''இம்மையத்தில் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், தகுதி மற்றும் திறன்களுக்கு தகுந்தவாறு தனியார் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும்.''சுய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக, பொருளாதார முன்னேற்றம் பெற முடியும்,'' என்றார்.டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ், எஸ்.பி., செல்வநாகரத்தினம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் வசந்தராம்குமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X