பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு கிடைத்தது இழப்பீடு

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : இயற்கை சீற்றத்தில் வாழை பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எட்டு பேருக்கு, 2.98 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, கலெக்டர் சமீரன் நேற்று வழங்கினார்.இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள், இழப்பீடு பெற வசதியாக பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இதில் வாழை பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகள், எட்டு பேருக்கு நீண்ட காலமாக இழப்பீடு கிடைக்காமல் இருந்தது.வேளாண் துறையினர்

கோவை : இயற்கை சீற்றத்தில் வாழை பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எட்டு பேருக்கு, 2.98 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, கலெக்டர் சமீரன் நேற்று வழங்கினார்.

இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள், இழப்பீடு பெற வசதியாக பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இதில் வாழை பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகள், எட்டு பேருக்கு நீண்ட காலமாக இழப்பீடு கிடைக்காமல் இருந்தது.

வேளாண் துறையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக, காப்பீட்டுத்தொகைக்கான காசோலை, அவர்களுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குனர் சித்ரா தேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X