பொது செய்தி

தமிழ்நாடு

சுத்திகரித்த கழிவு நீரால் விவசாயம் செழிக்கும்! 1,500 ஏக்கர் விளைநிலத்துக்கு புத்துயிர்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கும் கழிவு நீரை, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, தொட்டி கட்டும் பணி, நேற்று துவக்கப்பட்டது.ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், ரூ.64.60 கோடியில், ஒண்டிப்புதுாரில் நாளொன்றுக்கு, 6 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் கட்டப்பட்டுள்ளது.மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில்,

கோவை : ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கும் கழிவு நீரை, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, தொட்டி கட்டும் பணி, நேற்று துவக்கப்பட்டது.ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், ரூ.64.60 கோடியில், ஒண்டிப்புதுாரில் நாளொன்றுக்கு, 6 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில், அனைத்து விதமான கட்டடங்களுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு இன்னும் வழங்காததால், நாளொன்றுக்கு, 20 லட்சம் முதல், 30 லட்சம் லிட்டர் கழிவு நீரே சுத்திகரிக்கப்படுகிறது.சுத்திகரித்த கழிவு நீரை, விவசாய பயன்பாட்டுக்கு வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஒரு கிலோ லிட்டர் ரூ.2 என்ற விலையில், சுத்திகரிப்பு நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத்தினருக்கு வழங்க, மாநகராட்சி முன்வந்து, சுத்திகரிப்பு நிலைய வளாகத்துக்கும் இடம் கொடுத்தது.அதில், தொட்டி கட்டி, சுத்திகரித்த நீரை சேமித்து, 400 எம்.எம்., விட்டமுள்ள குழாய் பதித்து, லட்சுமி நாயக்கன்பாளையம், போகம்பட்டி, கேத்தனுார், வடவள்ளி பகுதியில் உள்ள, 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தினமும், 1.5 கோடி லிட்டர் சுத்திகரித்த நீரை, 'பம்ப்' செய்து, தங்கள் தோட்டங்களுக்கு எடுத்துச் செல்ல, விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.இப்பணியை, சிங்காநல்லுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் நேற்று துவக்கி வைத்தார். மாநகராட்சி நகர பொறியாளர் லட்சுமணன், சுத்திகரிப்பு நீரேற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் வெங்கிடுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X