பொது செய்தி

தமிழ்நாடு

எப்படிங்க நாங்க குடும்பம் நடத்துறது? காஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கேள்வி

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : தமிழகத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, 25 ரூபாய் உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றம் குறித்து, இல்லத்தரசிகள் சிலர் புலம்பித்தீர்த்தனர்.ஏ.மீனாட்சி, குனியமுத் துார்: மாதம், மாதம் காஸ் விலையை இப்படி உயர்த்தினால், எப்படி குடும்பம் நடத்துவது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வியாபாரம் நடந்தால் எனக்கு வருமானம். ரூ. 400க்கு விற்று வந்த காஸ் தற்போது, ரூ.900ஐ

கோவை : தமிழகத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, 25 ரூபாய் உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது.

இந்த விலை ஏற்றம் குறித்து, இல்லத்தரசிகள் சிலர் புலம்பித்தீர்த்தனர்.ஏ.மீனாட்சி, குனியமுத் துார்: மாதம், மாதம் காஸ் விலையை இப்படி உயர்த்தினால், எப்படி குடும்பம் நடத்துவது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வியாபாரம் நடந்தால் எனக்கு வருமானம். ரூ. 400க்கு விற்று வந்த காஸ் தற்போது, ரூ.900ஐ தொட்டு விட்டது. குடும்பம் நடத்தவே ரொம்ப கஷ்டமாக உள்ளது.கே.கலாராணி, லாலி ரோடு: மத்திய அரசு, மாநில அரசு விலை உயர்வை பற்றி கண்டுகொள்வதில்லை.

மக்களின் மீது அக்கறையும் இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி வருவதால், ஏழை மக்கள் என்ன செய்ய முடியும். இதனை எந்த அரசும் தட்டி கேட்பதில்லை.கே.சுகன்யா, சீரநாயக்கன் பாளையம்: ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. எந்த ஒரு ஆட்சியிலும் மக்களுக்கு விடிவு காலம் பிறந்தது இல்லை. மாறி, மாறி கஷ்டம் தான். மாதம் காஸ் சிலிண்டருக்கென, 2 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி வைக்க வேண்டும் போல.எம்.அர்ச்சனா, ரத்தினபுரி: இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் தான். அதிலும் தினக்கூலிக்கு செல்லும் நபர்கள்தான், அதிகம் உள்ளனர். குறைந்த சம்பளத்தில் காஸ், பெட்ரோலுக்கே செலவாகி விடுகிறது. குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X