பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடிகளுக்கு வந்த குழந்தைகள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : அங்கன்வாடிகள் நேற்று திறந்த நிலையில், பெற்றோருடன் குழந்தைகள் வந்து, ஊட்டச்சத்து பொருட்களை பெற்று சென்றனர்.கோவை மாவட்டத்தில், ஆயிரத்து 697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு, இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, அடிப்படை கல்வியோடு, ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன.நேற்று பள்ளிகள் திறந்த நிலையில், அங்கன்வாடி

கோவை : அங்கன்வாடிகள் நேற்று திறந்த நிலையில், பெற்றோருடன் குழந்தைகள் வந்து, ஊட்டச்சத்து பொருட்களை பெற்று சென்றனர்.கோவை மாவட்டத்தில், ஆயிரத்து 697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

இங்கு, இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, அடிப்படை கல்வியோடு, ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன.நேற்று பள்ளிகள் திறந்த நிலையில், அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில், குழந்தைகள் வரவழைக்கப்பட்டு, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.

காலை 11:30 முதல் 12:30 மணி வரை மட்டுமே, மையங்கள் செயல்பட்டன.பெற்றோருடன் முக கவசம் அணிந்த நிலையில், குழந்தைகள் மையத்திற்கு வந்தனர். அனைத்து மையங்களிலும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. சமூக இடைவெளி பின்பற்றி, மையங்களின் செயல்பாடுகள் மேற்கொள்ள, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X