மாணவர்களுக்கு இனிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு இனிப்பு

Added : செப் 02, 2021
Share
திண்டிவனம்-திண்டிவனம், காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லுாரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களை வரவேற்க, நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன்

திண்டிவனம்-திண்டிவனம், காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லுாரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களை வரவேற்க, நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் உத்தரவின்படி, ஊழியர்கள் பள்ளி வளாகத்தில் வாழை மரம், தோரணங்கள் கட்டி, பந்தல் அமைத்திருந்தனர்.பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி வழங்கி அனுமதிக்கப்பட்டனர். மேலும், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர் நித்திலவள்ளி, உதவி பொறியாளர் தேவநாதன், பணி ஆய்வர் ஆரோக்கியா பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X