பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கிடைக்கப் பெறாத, மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடக்கிறது.மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்காக, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதில் ஒரு சிலருக்கு, ஆவணங்கள் தெளிவில்லாததால் இன்னும் அடையாள அட்டை வழங்கப்படாமல் நிலுவையில்

கோவை : தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கிடைக்கப் பெறாத, மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடக்கிறது.மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்காக, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

இதில் ஒரு சிலருக்கு, ஆவணங்கள் தெளிவில்லாததால் இன்னும் அடையாள அட்டை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.இந்த குறைபாட்டை போக்கும் நோக்கத்துடன், சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. வால்பாறை தாலுகா தவிர, மற்ற அனைத்து தாலுகாவிலும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், இன்று காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது.ஏற்கனவே விண்ணப்பித்து,

இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கிடைக்காதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.தங்கள் அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல், மார்பளவு போட்டோ, மாற்றுத்திறனாளியின் கையொப்பம் அல்லது கைரேகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.இவற்றை, மாற்றுத்திறனாளி அல்லது அவரது பாதுகாவலர் முகாமில் வழங்கலாம் என்று, கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார். வால்பாறை பகுதிக்கு மட்டும் தாலுகா அலுவலகத்தில், இந்த முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X