பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளிகளுக்கு 3,829 மாணவர்கள் வருகை

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு, 3,829 மாணவ, மாணவியர் நேற்று வருகை புரிந்தனர்.கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், ஐந்து மாத இடைவெளிக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல்கட்டமாக, 9, 10, 11, 12ம் வகுப்புகள் நடத்தப்பட்டன.முன்னெச்சரிக்கையாக, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்; வகுப்புக்கு, 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். சுழற்சி அடிப்படையில்

கோவை : கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு, 3,829 மாணவ, மாணவியர் நேற்று வருகை புரிந்தனர்.கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், ஐந்து மாத இடைவெளிக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

முதல்கட்டமாக, 9, 10, 11, 12ம் வகுப்புகள் நடத்தப்பட்டன.முன்னெச்சரிக்கையாக, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்; வகுப்புக்கு, 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். சுழற்சி அடிப்படையில் வகுப்பு நடத்த, தமிழக அரசு அறிவுறுத்தியது.கோவை மாநகராட்சி பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்களும், மாநகராட்சி பள்ளிக்கு தாவியுள்ளனர். மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், சுழற்சி முறையில் வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று, 5,392 மாணவ - மாணவியர் பள்ளிக்கு வருவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3,829 பேரே வந்திருந்தனர்; 1,363 பேர் 'ஆப்சென்ட்' ஆகியிருந்தனர்.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், ''பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு, விருப்பம் இல்லாதோருக்கு 'ஆன்-லைன்' வகுப்பு நடத்தப்படும். இதற்குரிய ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்துள்ளனர். பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, துாய்மையாக வைத்திருக்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X