என்.எல்.சி.,யில் மண் வெட்டும் இயந்திரம் சரிந்து விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி.,யில் மண் வெட்டும் இயந்திரம் சரிந்து விபத்து

Added : செப் 02, 2021
Share
நெய்வேலி-என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் மண்வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரம் சரிந்து விபத்து ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தின் மிடில் பெஞ்சில் நேற்று காலை மண் வெட்டும் இயந்திரம் மேல் மண்ணை வெட்டி எடுத்து, பள்ளமான பகுதிகளில் கொட்டி நிரவும் பணியில் ஈடுபட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டதால்

நெய்வேலி-என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் மண்வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரம் சரிந்து விபத்து ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தின் மிடில் பெஞ்சில் நேற்று காலை மண் வெட்டும் இயந்திரம் மேல் மண்ணை வெட்டி எடுத்து, பள்ளமான பகுதிகளில் கொட்டி நிரவும் பணியில் ஈடுபட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டதால் இயந்திரம் சரிந்தது.நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரம் என்பதால் மின்சாரம் தானாகவே டிரிப் ஆகி விட்டது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்கள் சேகர், 56; வேல்முருகன், 56; தனியார் நிறுவன தொழிலாளர்கள் சந்திரசேகர், 35; பாலமுருகன், 49; மணிகண்டன், 35, ஆகியோர் காயங்களின்றி தப்பினர். என்.எல்.சி., நிறுவன மனிதவளத்துறை மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் விக்ரமன், விபத்து குறித்து விசாரணை நடத்தினார். விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, சேத மதிப்பை கணக்கிடுதல் மற்றும் மீட்பு பணிகளை விரைந்து முடித்திட சிறப்புக்குழு அமைத்து உத்தரவிட்டார். சுரங்கத்துறை செயல் இயக்குநர் சுரேஷ் சந்திர சுமந்த், முதன்மை பொதுமேலாளர்கள் பெருமாள்சாமி, கபிலன், 2ம் சுரங்க பொதுமேலாளர் தயானந்த் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X