பொது செய்தி

தமிழ்நாடு

குட்டைகள் துார்வார பச்சைக்கொடி! இனி, நிலத்தடி நீர் மட்டம் உயரும்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்கள், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பொலிவூட்டப்படுகின்றன. நொய்யல் வழித்தடத்தில் உள்ள குளங்கள், பொதுப்பணித்துறையால் மேம்படுத்தப்படுகின்றன. ஆங்காங்கே உள்ள குட்டைகள், வறண்டு காணப்படுகின்றன. அதற்கான நீர் வழித்தடங்கள் புதர்மண்டி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்டெடுத்து, நீர் தேக்கினால், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி

கோவை : கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்கள், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பொலிவூட்டப்படுகின்றன.
நொய்யல் வழித்தடத்தில் உள்ள குளங்கள், பொதுப்பணித்துறையால் மேம்படுத்தப்படுகின்றன. ஆங்காங்கே உள்ள குட்டைகள், வறண்டு காணப்படுகின்றன. அதற்கான நீர் வழித்தடங்கள் புதர்மண்டி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்டெடுத்து, நீர் தேக்கினால், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

இதில், காளப்பட்டி சுற்றுப்பகுதியில் உள்ள குட்டைகளை துார்வார, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை முன்வந்துள்ளது. 18.16 ஏக்கர் பரப்புள்ள கரியபெருமாள் குட்டை, 4.42 ஏக்கர் பரப்புள்ள தொட்டிபாளையம் குட்டை, 2.87 ஏக்கர் பரப்புள்ள கலாம் பார்க், 13.84 ஏக்கர் பரப்பிலான செட்டி குட்டை ஆகியவற்றை, தங்களது செலவில், மேற்கண்ட அறக்கட்டளை துார்வாருகிறது.இப்பணியை, கலெக்டர் சமீரன் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''தமிழகத்தில், 35 நீராதாரங்களை துார்வார இருக்கிறோம். கோவையில், காளப்பட்டியை சுற்றி, 8 நீராதாரங்களை மீட்டெடுக்க, அனுமதி பெற்றுள்ளோம். முதல்கட்டமாக, ரூ.35 லட்சம் செலவில், 4 நீராதாரங்களை துார்வாரும் பணி துவக்கி உள்ளோம்;

அக்., 15க்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். அரசு நிர்ணயித்துக் கொடுக்கும் எல்லையில், வேலி அமைக்கப்படும். குப்பை, புதர்களை அகற்றி, நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில், துார்வாரப்படும். படிக்கரை அமைக்கப்படும். மற்ற நான்கு நீராதாரங்கள், அடுத்தகட்டமாக புனரமைக்கப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X