சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

Added : செப் 02, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே வெறி நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த உ.செல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கொடியான் மனைவி சின்னப்பிள்ளை, 60; இவர், 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.நள்ளிரவில் 5க்கும் மேற்பட்ட வெறி

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே வெறி நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்தன.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த உ.செல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கொடியான் மனைவி சின்னப்பிள்ளை, 60; இவர், 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.நள்ளிரவில் 5க்கும் மேற்பட்ட வெறி நாய்கள், பட்டிக்குள் புகுந்து 6 ஆடுகளைக் கடித்து குதறியது. இதில் 6 ஆடுகள் இறந்தன. 2 ஆடுகளை நாய்கள் கடித்து, பட்டிக்கு வெளியே இழுத்துச் சென்றன.நேற்று காலை ஆடுகள் இறந்து கிடப்பதைப் பார்த்து சின்னப்பிள்ளை அதிர்ச்சியடைந்தார்.வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X