சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு

Added : செப் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம்-மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்த வழக்கில், விவசாயிக்கு சிறை தண்டனை மற்றும் 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஏமப்பேர் காலனியைச் சேர்ந்தவர் பூங்கான் மகன் பிரபு, 29; இவர், 2019 மே 3ம் தேதி அதே கிராமத்தில் கோகுல்தாஸ், 52; என்பவரின் குத்தகை நிலத்தில் இறந்து கிடந்தார்.காட்டுப்பன்றிகளுக்கு சட்டவிரோதமாக கோகுல்தாஸ்

விழுப்புரம்-மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்த வழக்கில், விவசாயிக்கு சிறை தண்டனை மற்றும் 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஏமப்பேர் காலனியைச் சேர்ந்தவர் பூங்கான் மகன் பிரபு, 29; இவர், 2019 மே 3ம் தேதி அதே கிராமத்தில் கோகுல்தாஸ், 52; என்பவரின் குத்தகை நிலத்தில் இறந்து கிடந்தார்.காட்டுப்பன்றிகளுக்கு சட்டவிரோதமாக கோகுல்தாஸ் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி தனது மகன் பிரபு இறந்ததாக அரகண்டநல்லுார் போலீசில் பூங்கான் புகார் அளித்தார். கோகுல்தாஸ் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு, 51; வேலு, 45; ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கோகுல்தாஸ் தெரிவித்தார். அவர்கள் இருவரையும் போலீசார் இவ்வழக்கில் சேர்த்தனர்.வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட கோகுல்தாஸ், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததற்கு 3 ஆண்டு சிறையும், 6,861 ரூபாய் அபராதமும், மின்வேலி அமைத்து மனித உயிருக்கு இறப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறையும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.சிறை தண்டனையை ஏக காலத்திலும், அபராத தொகையை தனித்தனியாகவும் செலுத்த உத்தரவிட்டார்.மேலும், போதிய சாட்சிகள் இல்லாததால் சேட்டு, வேலு ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X