ரூ.85 ஆயிரம் மோசடி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.85 ஆயிரம் மோசடி

Added : செப் 02, 2021
Share
விழுப்புரம்-முகநுால் மூலம் வாலிபரிடம் 85 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஹசின் தாஹீர் மகன் முகமது முஹ்சின், 24; இவருக்கு, 2020 ஜூலை மாதம் டேவிட் என்ற பெயருடைய நபர் முகநுால் மூலம் நண்பராக பழகியுள்ளார்.அவர் வாட்ஸ் ஆப் மூலம் கடந்த மாதம் தொடர்பு கொண்டு பரிசு

விழுப்புரம்-முகநுால் மூலம் வாலிபரிடம் 85 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஹசின் தாஹீர் மகன் முகமது முஹ்சின், 24; இவருக்கு, 2020 ஜூலை மாதம் டேவிட் என்ற பெயருடைய நபர் முகநுால் மூலம் நண்பராக பழகியுள்ளார்.அவர் வாட்ஸ் ஆப் மூலம் கடந்த மாதம் தொடர்பு கொண்டு பரிசு பொருட்கள் பார்சலில் அனுப்பியுள்ளதாகவும், டில்லி இண்டர்நேஷனல் விமான நிலைய கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.இதற்காக, 85 ஆயிரம் ரூபாயை தனது வங்கிக் கணக்கில் செலுத்தும்படி கூறியுள்ளார். இதனை நம்பிய முகமது முஹ்சின், மர்ம நபரின் வங்கிக் கணக்கில் 3 தவணைகளாக 85 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், அவர் கூறியது போல் பரிசு பொருட்கள் ஏதும் வராததால் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.இது குறித்து முகமது முஹ்சின் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X