பொது செய்தி

தமிழ்நாடு

முற்றுகை போராட்ட முயற்சி : 420 பேர் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஊட்டி : ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயன்ற, 420 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி நகராட்சிக்கு நிலுவை வாடகை பாக்கி செலுத்தாத, 757 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் கடந்த, 25ம் தேதி 'சீல்' வைத்தது. இந்நிலையில், 'வாடகையை குறைக்க வேண்டும்' என, வலியுறுத்தி, வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.'நிலுவை வாடகையில், 50 சதவீதம் செலுத்தினால்,

ஊட்டி : ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயன்ற, 420 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி நகராட்சிக்கு நிலுவை வாடகை பாக்கி செலுத்தாத, 757 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் கடந்த, 25ம் தேதி 'சீல்' வைத்தது. இந்நிலையில், 'வாடகையை குறைக்க வேண்டும்' என, வலியுறுத்தி, வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.'நிலுவை வாடகையில், 50 சதவீதம் செலுத்தினால், கடைகள் திறக்கப்படும்,' என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சமது தலைமையில், வியாபாரிகள் திரண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த மார்க்கெட் பகுதியில் இருந்து, 12:30 மணிக்கு கோஷம் எழுப்பி வந்தனர்.வியாபாரிகள் கூறுகையில்,'தி.மு.க.,தேர்தல் அறிக்கையில் கூறியதை போல், ஊட்டி நகராட்சி வாடகை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்;

இதற்காக அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும்; விடியலை தேடி ஓட்டு போட்டோம்: வீதியில் நிற்கிறோம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.தொடர்ந்து, காபிஹவுஸ் சந்திப்பில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, 50 பெண்கள் உட்பட, 420 பேர் கைது செய்யப்பட்டனர்.நகராட்சி கமிஷனர் சரஸ்வதி கூறுகையில், ''சீல் வைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை, 79 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும் பலர் செலுத்தி வருகின்றனர். நிலுவை வாடகை செலுத்தியவர்களின் கடைகள் படிப்படியாக திறக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X