சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் திருட முயன்ற மூவர் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
வேப்பூர்-வேப்பூரில் பைக் பெட்டியை உடைத்து பணம் திருட முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 56; தனியார் பால் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்யும் பணி செய்கிறார். இவர், நேற்று முன்தினம் கழுதுாரிலுள்ள வங்கியில், ரூ. 45 ஆயிரத்தை எடுத்து பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு

வேப்பூர்-வேப்பூரில் பைக் பெட்டியை உடைத்து பணம் திருட முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 56; தனியார் பால் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்யும் பணி செய்கிறார். இவர், நேற்று முன்தினம் கழுதுாரிலுள்ள வங்கியில், ரூ. 45 ஆயிரத்தை எடுத்து பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.வேப்பூர் பஸ் நிலையம் எதிரே வந்த போது, பைக் பஞ்சரானது. அருகிலிருந்த பஞ்சர் கடையில் பைக்கை நிறுத்தி விட்டு, பெட்டியிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு, டீக்கடைக்கு சென்று விட்டு, திரும்ப பஞ்சர் கடைக்கு வந்தார். அப்போது, மூன்று வாலிபர்கள், பைக் பெட்டியை உடைக்க முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர்களை மடக்கினார்.வேப்பூர் போலீசார், அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள், பெரம்பலுார் மாவட்டம், அறும்பாவூர் செந்தில்குமார், 35, பாரதிராஜா, 26, சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் சித்துராஜா, 26 என்பதும், வெங்கடேசன் பணத்தை பைக் பெட்டியில் வைப்பதை பார்த்து, பின் தொடர்ந்து வந்து, திருட முயன்றது தெரிய வந்தது.வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X