சம்பவம் செய்தி

தமிழ்நாடு

25 டன் ரேஷன் அரிசி கடத்தல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே 25 டன் ரேஷன் அரிசி கடத்திய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எதலவாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., மணிமொழியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று இரவு 10:00 மணியளவில் சம்பவ இடத்திற்குச்

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே 25 டன் ரேஷன் அரிசி கடத்திய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எதலவாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., மணிமொழியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று இரவு 10:00 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து டாரஸ் லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த 4 பேரை பிடித்தனர். அங்கிருந்த, 25 டன் அரிசி மூட்டைகள் மற்றும் டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர்.மேலும், ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தது யார், எங்கு கடத்திச் செல்ல முயன்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X