இந்தியா

மாநில அந்தஸ்து?: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு...மத்திய அரசிடம் கோர முதல்வர் முடிவு; மேலும் பல சலுகைகள் அறிவிப்பு

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021
Share
Advertisement
துச்சேரி-''புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக, பிரதமரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசும் இதுகுறித்து முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தேவைப்பட்டால், இந்த கூட்டத்தொடரில் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என,
 மாநில அந்தஸ்து?: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு...மத்திய அரசிடம் கோர முதல்வர் முடிவு; மேலும் பல சலுகைகள் அறிவிப்பு

துச்சேரி-''புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக, பிரதமரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசும் இதுகுறித்து முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தேவைப்பட்டால், இந்த கூட்டத்தொடரில் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார்.

மேலும், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, அரசுத் துறைகளில் குறைந்தபட்ச சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் என, பல்வேறு சலுகை அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக., 26ல் துவங்கியது. அன்று மாலையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து, முதல்வர் ரங்கசாமி நேற்று பேசியதாவது:புதுச்சேரி மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளை களைந்து, நல்ல ஆட்சியை தருவோம். புதுச்சேரி அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், 9,924.41 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.மூலதன செலவினங்களுக்காக 1,200.44 கோடி, வருவாய் செலவினங்களுக்கு 8,723.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை, 60 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்த்த, நிடி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளேன்.

மத்திய அரசும், செய்து தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது.மத்திய அரசு 1.5 சதவீதம் மட்டுமே கூடுதலாக நிதி அளித்துள்ளதாக கூறுகிறீர்கள். கடந்த ஜனவரி மாதமே பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால் நாம், மே மாதம் தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். இதனால் உடனடியாக கூடுதல் நிதியை தரவில்லை. அடுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி பெற முடியும்.மேலும், ஏற்கனவே பிரதமரிடம் கூடுதலாக 500 கோடி நிதி கேட்டுள்ளோம். இதை மீண்டும் வலியுறுத்தி பெறுவோம். அதிக நிதி பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மத்திய அரசு, நமக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.மாநில அந்தஸ்துபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் எங்கள் நோக்கம். நீண்ட நாட்களாக முதல்வராக இருந்த அனுபவத்தில், மாநில அந்தஸ்து இல்லாதது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். இது தொடர்பாக, பிரதமரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசும் ஒரு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.தேவைப்பட்டால், இந்த கூட்டத்தொடரில் இதுதொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும், மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவோம்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.'மாஸ்டர் பிளான்''பாசிக், பாப்ஸ்கோ' போன்ற கூட்டுறவு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தன என்பது தற்போது தான் தெரிகிறது. விவசாயிகள் இடுபொருட்கள், உபகரணங்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.இவற்றுக்கு, 33 மதுபான பார்கள், ஐந்து பெட்ரோல் பங்குகள் இருந்தும் கூட்டுறவு நிறுவனங்கள் எப்படி நலிவடைந்தது எனத் தெரியவில்லை. பொதுத் துறை நிறுவனங்களுக்கு புத்துயிர் தந்து, மீண்டும் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.விற்கப்பட்ட வீட்டு மனைகள், பிரிக்கப்பட்ட வீட்டு மனைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலுக்கு, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்படும். புதுச்சேரி மாஸ்டர் பிளானும் புதுப்பிக்கப்படும்.கல்விக்கடன் தள்ளுபடிதியாகிகள் பென்ஷன் தற்போது, 9,000 ரூபாய் வழங்கப் படுகிறது. இது, 10 ஆயிரமாக உயர்த்தப்படும்.புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தில், கல்விக் கடனை தள்ளுபடி செய்துள்ளதைப் போல், பிற்படுத்தப்பட்டோர் கழகம் மூலம் பெற்ற கல்விக் கடனும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.'சென்டாக்' மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுதையும் அரசே செலுத்தும்.வீடு கட்டும் நிதி உயர்வுஎம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி முதல் கட்டமாக, 1 கோடியும், பிறகு 1 கோடியும் என, மொத்தம் 2 கோடி ரூபாய், இந்த நிதி ஆண்டிலேயே வழங்கப்படும். ஆதிதிராவிடர் மக்கள் வீடு கட்ட, தற்போது 5 லட்சம் வழங்குவது, 5,5௦ லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை 18 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பெண்கல்வி ஊக்கத்தொகை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளதை, 10ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளத்தை 10 ஆயிரமாக உயர்த்தி, அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், கருவூலம் மூலம் மாத இறுதியில் வழங்கப்படும்.அனைத்து அரசுத் துறைகளிலும் குறைவாக சம்பளம் வாங்கும் அனைவருக்கும் 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது நிலையை உணர்ந்து பணியாற்றி, லாபத்தை ஈட்டி, சம்பளத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணம்.இவ்வாறு, முதல்வர் ரங்கசாமி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X