பொது செய்தி

இந்தியா

செப்.,15ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு,

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு உத்தரவு, ஆகஸ்ட் 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.அதையடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, செப்டம்பர் 15ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து, மாநில செயலாக்க குழு உறுப்பினர்

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு உத்தரவு, ஆகஸ்ட் 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.அதையடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, செப்டம்பர் 15ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து, மாநில செயலாக்க குழு உறுப்பினர் செயலர் அசோக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.நேற்று செப்.1ம் தேதி பள்ளி, கல்லுாரி திறப்பினை தவிர, இம்முறை புதிய தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்பட வில்லை.சமூக, அரசியல், பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் ஒன்று கூடுவதற்கான தடை தொடர்கிறது.கடந்த முறை தளர்வின்போது, கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் 25 பேர் மட்டுமே அதிக பட்சமாக கலந்து கொள்ள முடியும். இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5.௦௦ மணி வரை என அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கும் எந்தவித மாற்றம் இன்றி தொடர்கிறது.அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கோவில்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள் போன்றவை இயங்குவதற்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X