சட்டசபை பின்பக்க வாயில் திடீர் மூடல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சட்டசபை பின்பக்க வாயில் திடீர் மூடல்

Added : செப் 02, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை வளாகத்தின் பின்பக்க வாயில், திடீரென மூடப்பட்டது.புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தொடர் கூட்டம், கடந்த 26ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதனால், சட்டசபை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், அரசு செயலர்கள், துறை தலைவர்கள் சட்டசபை முன்புற வாயில் வழியாக வந்து செல்வர்.பத்திரிகையாளர்கள், சட்டசபை ஊழியர்கள்

புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை வளாகத்தின் பின்பக்க வாயில், திடீரென மூடப்பட்டது.புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தொடர் கூட்டம், கடந்த 26ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதனால், சட்டசபை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், அரசு செயலர்கள், துறை தலைவர்கள் சட்டசபை முன்புற வாயில் வழியாக வந்து செல்வர்.பத்திரிகையாளர்கள், சட்டசபை ஊழியர்கள் பின்புற வழியாக செல்வர். நேற்று முன்தினம், முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த, பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள் ஏராளமானோர் சட்டசபைக்குள் வந்தனர்.இதனால், பொதுமக்கள் சட்டசபைக்குள் வருவதை தடுக்க, சட்டசபையின் பின்புற வாயில் கதவு நேற்று மூடப்பட்டது. முன்புற வழியாக மட்டுமே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X