3 மாத நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம்| Dinamalar

3 மாத நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம்

Added : செப் 02, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள், 3 மாத நிலுவை சம்பளம் வழங்க கோரி, பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 700 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு, கடந்த 3 மாதங்களாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவில்லை.மூன்று மாத நிலுவை சம்பளம் வழங்கக் கோரி, புதுச்சேரி

புதுச்சேரி-புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள், 3 மாத நிலுவை சம்பளம் வழங்க கோரி, பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 700 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு, கடந்த 3 மாதங்களாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவில்லை.மூன்று மாத நிலுவை சம்பளம் வழங்கக் கோரி, புதுச்சேரி நகராட்சியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். கம்பன் கலையரங்கம் எதிரில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊழியர்களுடன், நகராட்சி துணை ஆணையர் நரேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.சம்பளம், ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதைத் தொடர்ந்து, ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக நேற்று நாள் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கல், வரி வசூல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கியது. சான்றிழ் பெற வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X