பொது செய்தி

இந்தியா

மதிய உணவு திட்ட ஊதியத்தை உயர்த்தி தர கோரிக்கை

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'மதிய உணவு திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்' என, பா.ஜ., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசினார்.சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:பள்ளிக் கல்வித் துறையின், மதிய உணவு திட்டத்தின் கீழ் 141 ஊழியர்கள் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6,426 ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்படுகிறது. வவுச்சர்

புதுச்சேரி-'மதிய உணவு திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும்' என, பா.ஜ., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசினார்.சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:பள்ளிக் கல்வித் துறையின், மதிய உணவு திட்டத்தின் கீழ் 141 ஊழியர்கள் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6,426 ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்படுகிறது. வவுச்சர் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல, மதிய உணவு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களின் ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மதிய உணவு திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, பள்ளி கல்வித் துறைக்கு மாற்ற வேண்டும். பொதுப்பணித் துறை ஊழியர்களின் குறைந்தபட்சம் ஊதியம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் ரங்கசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.முதல்வர் ரங்கசாமி: மதிய உணவு திட்டம், கடந்த ஆட்சியில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது அந்த மதிய உணவு திட்டம் எவ்வகையில் செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து, சம்பளம் உயர்வு, பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X