பொது செய்தி

இந்தியா

அண்ணாமலை நகரில் நிரந்தர சாலை அமைப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'செல்லப்பெருமாள்பேட்டை அண்ணாமலை நகரில் நிரந்தர சாலை அமைக்கப்படும்' என வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.லாஸ்பேட்டை, நந்தா நகர் முதல் குறுக்குத் தெரு விரிவு, அண்ணாமலை நகரில் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் வசதி இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., வைத்தியநாதன், முதற்கட்டமாக, பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு

புதுச்சேரி-'செல்லப்பெருமாள்பேட்டை அண்ணாமலை நகரில் நிரந்தர சாலை அமைக்கப்படும்' என வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.லாஸ்பேட்டை, நந்தா நகர் முதல் குறுக்குத் தெரு விரிவு, அண்ணாமலை நகரில் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் வசதி இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., வைத்தியநாதன், முதற்கட்டமாக, பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகளிடம் பேசி, கனகன் ஏரியில் துார்வாரப்படும் உபரி மண்ணை எடுத்து வந்து, சாலை அமைக்க நந்தா நகர் பகுதியில் கொட்டி வருகிறார். மேலும், சாலை பணிக்கு தனது செலவில், கட்டட இடிபாடுகளுடன் கூடிய மண்ணை கொட்டி வருகிறார். இப்பணியில், அப்பகுதி மக்களும் இணைந்துள்ளனர்.கொட்டப்பட்ட மண்ணை, உழவர்கரை நகராட்சி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணி நேற்று நடந்தது. இப்பணியை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'சாலையின் உயரத்தை அதிகரிக்க தற்காலிகமாக கட்டட இடிபாடு மண் கொட்டப்பட்டு வருகிறது. அவை நகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சமன்படுத்தி கொடுக்கப்படும். தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டதும், நந்தா நகர் விரிவு, அண்ணாமலை நகரில் நிரந்தர சாலை அமைக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X