பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் ஐகோர்ட் கிளை துவங்க வேண்டும்

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், பா.ஜ. எம்.எல்.ஏ., அசோக்பாபு பேசியதாவது:புதுச்சேரி அரசு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நகரை ஆய்வு செய்து ஒருவழிப் பாதை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவதில் நிறைய சிரமங்கள் உள்ளது. ஆட்கள் மூலம் பில் என்ட்ரி சரியா போடுவதில்லை. இது குறித்து

புதுச்சேரி-சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், பா.ஜ. எம்.எல்.ஏ., அசோக்பாபு பேசியதாவது:புதுச்சேரி அரசு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நகரை ஆய்வு செய்து ஒருவழிப் பாதை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவதில் நிறைய சிரமங்கள் உள்ளது. ஆட்கள் மூலம் பில் என்ட்ரி சரியா போடுவதில்லை. இது குறித்து விபரங்கள் கேட்டால் பொதுமக்களை மாரியாதை குறைவாக நடத்துகின்றனர். சுற்றுலாத் துறை வளர்ச்சியடைய புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பள்ளி, கல்லுாரிகளில் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். திறமையான மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சி அளித்து போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும். முதலியார்பேட்டை நுாறடி சாலையில் ரயில்வே துறை சுரங்கப்பாதை அமைத்துள்ளது. மாநில அரசு இணைப்பு சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.பயன்பாடு இல்லாமல் மூடி கிடக்கும் அரசு கட்டடங்களை சரி செய்து, தனியார் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கி, அரசுக்கு வருவாய் ஈட்ட வழிவகை செய்ய வேண்டும். ஐகோர்ட் கிளையை புதுச்சேரியில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனாம்-புதுச்சேரிக்கு நேரடி ரயில் போக்குவரத்து இல்லை. காக்கிநாடாவிலிருந்து செங்கல்பட்டு வரை வரும் ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X