பொது செய்தி

இந்தியா

மின்துறை தனியார்மயம் விவகாரம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மின்துறை தனியார் மயமாக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியதால், சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று நடந்த விவாதம் வருமாறு:அசோக்பாபு, (பா.ஜ.,): மின்துறையினர் சரிவர ரீடிங் எடுக்காமல், சராசரி கட்டணம் என கட்டணம் அதிகமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும்.எதிர்கட்சி தலைவர் சிவா: மின்துறையை

புதுச்சேரி-மின்துறை தனியார் மயமாக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியதால், சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று நடந்த விவாதம் வருமாறு:அசோக்பாபு, (பா.ஜ.,): மின்துறையினர் சரிவர ரீடிங் எடுக்காமல், சராசரி கட்டணம் என கட்டணம் அதிகமாக வசூலிப்பதை தடுக்க வேண்டும்.எதிர்கட்சி தலைவர் சிவா: மின்துறையை தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதை நீங்கள் ஆதிரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.ராமலிங்கம், (பா.ஜ.,): மின்துறையை தனியார் மயமாக்க போகிறோம் என்ற அறிவிப்பால், மின்துறை ஊழியர்கள் தற்போது ஒழுங்காக வேலை பார்க்கின்றனர்.சிவா: தனியார் மயமாவதை ஆதரிக்கறீர்களாராமலிங்கம்: தனியார் ஒரு பார் வைத்தால் லாபம் சம்பாதிக்கும் நிலையில், 31 பார்கள் நடத்திய பாப்ஸ்கோ எப்படி நஷ்டமடைந்தது. அரசு துறை என்றால் ஊழியர்கள் மெத்தனமாக செயல்படுகின்றனர். அதற்காக, மின்துறை தனியார்மயமாவதை நான் ஆதரிக்கவில்லை. தனியார் என்றால் மோசம் என்பதும் கிடையாது.நாஜிம், (தி.மு.க.): தனியார்மயத்தை எதிர்ப்பதாக எடுத்துக் கொள்ளலாமா.ராமலிங்கம், (பா.ஜ.,): இது எனது தனிப்பட்ட கருத்து. மின்துறை தனியார்மயமாகிறதா என்பதை முதல்வர் முடிவு செய்வார்.இதுதொடர்பாக எதிர்க்கட்சி, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படவே, சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.அப்போது சபையை நடத்திய துணை சபாநாயகர் ராஜவேலு, 'மானியக் கோரிக்கையில் பேச வேண்டியதை, பட்ஜெட் மீதான விவாதத்தில் பேச அனுமதிக்க முடியாது' என்றார்.அதனைத் தொடர்ந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சரை பார்த்து, 'மின்துறை தனியார் மயமாக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என்றனர்.இதற்கு துணை சபாநாயகர் அனுமதி மறுக்கவே, மீண்டும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X