பொது செய்தி

இந்தியா

கல்வே காலேஜ், வ.உ.சி., பள்ளி கட்டடம் ரூ.7.61 கோடி செலவில் புனரமைக்கும் பணி

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பழமையான கல்வே காலேஜ் கட்டடம், வ.உ.சி. பள்ளி கட்டடங்களை, ரூ.7.61 கோடி செலவில் புனரமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், ராஜ்பவன் தொகுதியில் உள்ள பழுதடைந்த கல்வே காலேஜ் பள்ளி கட்டடம் ரூ 4.80 கோடி மதிப்பிலும், வ.உ.சி. பள்ளி கட்டடம் ரூ.2.81 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளன.இதற்கான பணியை, முதல்வர் ரங்கசாமி
 கல்வே காலேஜ், வ.உ.சி., பள்ளி கட்டடம்  ரூ.7.61 கோடி செலவில் புனரமைக்கும் பணி

புதுச்சேரி-பழமையான கல்வே காலேஜ் கட்டடம், வ.உ.சி. பள்ளி கட்டடங்களை, ரூ.7.61 கோடி செலவில் புனரமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், ராஜ்பவன் தொகுதியில் உள்ள பழுதடைந்த கல்வே காலேஜ் பள்ளி கட்டடம் ரூ 4.80 கோடி மதிப்பிலும், வ.உ.சி. பள்ளி கட்டடம் ரூ.2.81 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளன.இதற்கான பணியை, முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தார். கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி அருண், இணை செயல் அதிகாரி மாணிக்தீபன், தலைமை தொழில்நுட்ப அதிகாரி லுசியன் பெட்ரோகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ,கல்வே காலேஜ் பள்ளி கட்டடம் புனரமைக்கும் பணியை 2023ம் ஆண்டு மே மாதமும், வ.உ.சி. பள்ளி கட்டடப் பணியை 2022 நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X