பொது செய்தி

இந்தியா

கொரோனா தாக்கத்தை பொறுத்து மற்ற வகுப்புகள் திறக்கப்படும்

Added : செப் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''புதுச்சேரியில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை பொறுத்தே, 1 முதல் 8 வரை வகுப்புகள் துவக்குவது குறித்து முடிவு செய்யப்படும்'' என கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டன.பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என, கல்வித் துறை

புதுச்சேரி-''புதுச்சேரியில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை பொறுத்தே, 1 முதல் 8 வரை வகுப்புகள் துவக்குவது குறித்து முடிவு செய்யப்படும்'' என கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டன.பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு செய்தார்.லப்போர்த் வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் நமச்சிவாயம், மாணவிகளிடம் நலம் விசாரித்தார்.வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.ஆய்வுக்கு பின்பு அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது;சிறப்பான முறையில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. நோட்டு புத்தகம் வழங்கவும், கிராமப்புற மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்யவும், மதிய உணவு வழங்கவும் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவற்றை உடனடியாக சரிசெய்ய கல்வித் துறை செயலர், இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரச்னைக்கும் தீர்வு காணப்படும்.கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.அதனால், கொரோனா 3வது அலை தாக்கத்தை பொறுத்து, 1 முதல் 8ம் வகுப்புகள் திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது நேரு எம்.எல்.ஏ., பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X